ஒப்பனை பொருட்கள் மார்பக புற்றுநோயை ஏற்படுத்துகிறதா? பெண்களே உஷார்!

Cosmetics cause breast cancer

இந்திய பெண்கள் மத்தியில் அதிகரித்துவரும் மார்பக புற்றுநோய்!

பெண்கள் மற்றும் அழகுசாதன பொருட்கள்

இந்திய பெண்களிடையே அழகு சாதனங்களை பயன்படுத்துவதற்கான ஆசை அதிகரித்து வருகிறது. இந்த போக்கு இந்தியாவில் பெண்களின் அழகுசாதன பொருட்கள் சந்தைகளின் வளர்ச்சியை கணிசமாக அதிகரித்து வருகிறது. TechSciResearch -ன் ஒரு சமீபத்திய ஆய்வு, இந்தியாவில் பெண்கள் ஒப்பனை பொருட்கள் சந்தை வளர்ச்சி 2015 ல் இருந்து 2020 வரை 16% இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நகர்ப்புற நடுத்தர மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் வேலை செய்யும் பெண்கள் எண்ணிக்கை 10% அதிகரிப்பு போன்றவை இதற்கு காரணமாக கருதப்படுகின்றது [1]. இந்தியாவில், ஒப்பனை பொருட்கள் துறையின் இந்த வளர்ச்சி, பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய் அதிகரித்துவர காரணமாக கருதப்படுகின்றது.

மார்பக புற்றுநோய் என்றால் என்ன?

What is Breast Cancer

மார்பக புற்றுநோய் என்பது மார்பகங்களின் செல்களில் உருவாக்கும் ஒரு வகை புற்றுநோயாகும். இந்நோய் பொதுவாக பெண்களில் அதிகமாகவும், ஆண்களிடம் அரிதாகவும் காணப்படுகிறது. இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு 10 லட்சம் பேர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அறிகுறிகள்: மார்பகங்களிலிருந்து இரத்தம் வெளியேற்றம், மார்பில் கட்டி மற்றும் மார்பக வடிவத்தில் மாற்றம் [2].

ஒப்பனை பொருட்கள் மற்றும் மார்பக புற்றுநோய்

ஒப்பனை பொருட்களில் பல்வேறு கலப்பு இரசாயனங்கள் உள்ளன. அவைகள் நமக்கு நல்ல வாசனையை தருகின்றன; நம்மை புத்துணர்ச்சியாக உணரவைக்கின்றன. ஆனால் இந்த ரசாயன கலவையின் வெளிப்பாடு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். டியுடரன்ட் ஒப்பனை பொருட்கள் போன்ற அழகு சாதனங்களில் கலந்துள்ள கெமிக்கல்ஸ் மார்பக புற்றுநோயை ஏற்படுத்தும் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. மார்பகப் பகுதிக்கு அருகில் பயன்படுத்தப்படும் இந்த இரசாயனங்கள் அடிக்கடி மீண்டும் மீண்டும் நேரடியாக தோலின் மீது பயன்படுத்தப்படுகின்றன. உங்கள் தோலில் எஞ்சியிருக்கும் இந்த இரசாயனங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் ஆபத்தான விளைவை ஏற்படுத்துகின்றன. பெண்கள் மத்தியில் underarm ஒப்பனை பயன்பாடு அதிகரித்துள்ளது. தி ரீட் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வு, டியுடரன்ட் ஒப்பனை பொருட்கள் பெண்களுக்கு வெவ்வேறு வகையான தீங்குகளை ஏற்படுத்துகின்றன என்று கண்டறிந்துள்ளது. அந்த ஆய்வின்படி, பெண்கள் ஒரு நாளைக்கு அதிகமாக 5 முறை அழகுசாதனப் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர் என்றும், அவர்களின் தோல் மீது ஒப்பனைகளின் இந்த அதிக அளவு பயன்பாடு மார்பக புற்றுநோய் சாத்தியத்தை அதிகரிக்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது [3]. டியோடரன்ட் என்பது ஆண்கள் மற்றும் பெண்களால் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஒப்பனை பொருட்களில் இருந்து வரும் வாசனை பல்வேறு கலவையை கொண்டிருக்கிறது. இவை மார்பக புற்றுநோயை ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகளை அதிகரிக்கக்கூடியது. இவை குழந்தைகள் மத்தியில் ஆஸ்துமாவை உருவாக்கும் சாத்தியக்கூறுகளையும் அதிகரிக்கக்கூடியது [3].

ஒப்பனைப்பொருட்களில் பயன்படுத்தப்படும் இரசாயனங்களின் பொதுவான பட்டியல்ஒப்பனைப்பொருட்களை தினசரி உபயோகிக்கும் வாடிக்கையாளர்கள், அவைகள் ஏற்படுத்தும் தீங்குகளை பற்றிய அறியாமையால், அவற்றை அதிகமாகவும், அடிக்கடியும் உபயோகிக்கப்படுத்துகின்றனர். Cuprite goethite, zincite, minimum organic compounds, amorphous carbon, elemental silicon or talc hematite, Parabens மற்றும் Phthalates ஆகியவை பொதுவாக ஒப்பனைப்பொருட்களில் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள்.

மார்பக புற்றுநோயை ஏற்படுத்தும் 2 முக்கிய ரசாயனங்கள்

ஒப்பனைப்பொருட்களில் 2 முக்கிய ரசாயனங்கள் மார்பக புற்றுநோய் ஏற்படுத்துகின்றன. Parabens மற்றும் Phthalates ஆகியவை அழகு சாதன பொருட்களில் பயன்படுத்தப்படும் முக்கிய ரசாயனங்கள் [5].

இந்த இரசாயனங்களின் வெளிப்பாடுகளில் இருந்து மற்றும் மார்பக புற்றுநோயை தடுப்பது எப்படி?

ஒப்பனைப்பொருட்களைப் பயன்படுத்துவதை குறைத்தல் – அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒப்பனைப் பொருட்களின் அளவைக்குறைத்தல் மூலம் புற்றுநோய் சாத்தியக்கூறுகளை குறைக்கலாம். இருப்பினும், பல்வேறு ரசாயன கலவையுடன் தயாரிக்கப்பட்ட இந்த ஒப்பனை மருந்துகள் ஒவ்வாமை மற்றும் பல்வேறு தோல் நோய்களை ஏற்படுத்தும். உங்கள் உடலில் மற்றும் தோலில் டியோட்ரண்ட் போன்ற பொருட்களை நேரடியாக பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். மார்பகப் பகுதிக்கு அருகில் கிரீம்களைப் பயன்படுத்தாமல் இருப்பதற்கும், ஒப்பனைகளைத் தவிர்ப்பதற்கும் முயற்சிக்கவும். ஆய்வுகள் இந்த தீங்கு விளைவிக்கக்கூடிய அழகுசாதனங்களை தவிர்க்க பரிந்துரைக்கின்றன.

இயற்கை அல்லது கரிம ஒப்பனை – சில தொழிலாளர்கள் தங்கள் தொழிலின் கட்டாயத்திற்காக அழகுசாதன பொருட்களை தவிர்க்க முடியாமல் இருக்கலாம். நீங்கள் அவர்களில் ஒருவராக இருக்கிறீர்களா? கவலைப்பட வேண்டாம். இயற்கை ஒப்பனைப்பொருள் பயன்பாடு உங்களை ஒவ்வாமைகளிலிருந்தும், புற்றுநோய் போன்ற கொடிய நோய்களில் இருந்தும் தவிர்க்கலாம். இந்தியாவில் இயற்கை ஒப்பனைப்பொருட்கள் கடைகளில் இயற்கை ஒப்பனைப்பொருட்கள் பொருட்கள் விற்கப்படுகின்றன. இவ்வாறு, இயற்கையான ஒப்பனைப்பொருள் பயன்பாடு ஒரு நல்ல மாற்றாக இருக்கும்.

Read this article in English: Women, Cosmetics & Breast Cancer in IndiaReferences

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *